English Version

“விகடன் ஹேக்கத்தான்” - விகடன் குழுமம் பெருமிதத்துடன் அறிவிக்கும் ஒரு டெக் நிகழ்வு! சுதந்திர இந்தியாவுக்கு முன்னரே பத்திரிகையுலகில் தடம் பதித்த, தமிழில் முதன்மையான ஊடக நிறுவனம் ஆனந்த விகடன். பத்திரிகைகள், புத்தகங்கள், தொலைக்காட்சி ஆகியவற்றைத் தொடர்ந்து டிஜிட்டல் தளத்தில் அழுத்தமாகக் கால் ஊன்றியிருக்கும் ஆனந்த விகடன் குழுமம், தனது நுகர்வோர்களுடனான தொடர்பை இன்னும் பலப்படுத்தவும், மேலும் வளப்படுத்தவும் CSR முன்னெடுப்பாக “விகடன் ஹேக்கத்தான்” நிகழ்வை நடத்தவிருக்கிறது.

இந்தியாவில் சமூக, கலாசார மாற்றங்கள் அனைத்துக்கும் சாட்சியாக இருக்கும் ஆனந்த விகடன்  தனது 90வது வருடப் பயணத்தை உற்சாகமாக துவக்கியிருக்கும் தருணமிது. இந்தப் பெருமித தருணத்தில், இந்த ஹேக்கத்தான் மூலம் தமிழ் சமூகம் சந்திக்கும் சில பிரச்னைகளுக்கு தீர்வு காண விரும்புகிறான் விகடன். சிக்கல்களுக்கு தீர்வுகளைத் தேடுபவர்களையும் தீர்வுகளையும் ஒரே புள்ளியில் தொழில்நுட்பம் மூலம் இணைப்பதன் மூலம், தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே விகடனின் எண்ணம்.


ஏன் ஹேக்கத்தான்?

ஒருமித்த எண்ணத்துடன் செயல்படும் பலரும் தங்கள் உற்பத்தித்திறனை / அன்றாட செயல்பாடுகளை பாதிக்கும் பல பிரச்னைகளை அனுதினம் எதிர்கொள்கிறார்கள். தினமும் ஒரே விஷயத்தை ஒரு பாணியில் செய்வது கூட அந்தப் பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கலாம். அந்த இயக்கத்தின்போது அவர்களுக்குத் தெரியாமலே அவர்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்கலாம்; அன்றாடம் பல புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்; பல சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வுகளைக் கண்டறியலாம். ஆனால், அந்த தெளிவு தேவைப்படுபவருக்கு பெரும்பாலும் கிடைப்பதே இல்லை. ஒருவர் தேவையில்லை என நினைக்கும் விஷயம், இன்னொருவரின் பல்லாண்டு கால சிக்கலை நொடியில் தீர்ப்பதாக அமையலாம். குப்பையில் வைரத்துண்டே இருந்தாலும், கோழிக்கு அது குப்பைதானே?!

முன்பு எப்போதையும்விட இப்போது அதிகளவில் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிலிருந்து கிடைக்கும் தகவல்கள் டெரா பைட் அளவுக்கு குவிகின்றன. அப்படிச் சேகரமான தகவல்களை/தீர்வுகளை தன்னார்வ நிறுவனங்கள், அரசு அமைப்புகள், கார்பரேட் நிறுவனங்கள் என சகலதரப்பினரும் உலகத்துடன் பகிர்ந்துகொள்ளத் தயாராகவே இருக்கிறார்கள்.   பிரச்னைகளுக்கான தீர்வுகளைத் தேடுகிறவர்கள்.... தீர்வுகளைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பவர்கள்... ஆகிய இருவருக்கும் இடையிலான தொழில்நுட்பப் பாலமாக இருக்கப் போவதுதான் Vikatan Hackathon.  அறிதல்கள், புரிதல்கள்... இவற்றை பரஸ்பரம் தேவைப்படும் சமயம் தேவைப்படுபவருடன் பகிந்து கொள்ளவே இந்த ஹேக்கத்தான் முயற்சி.

Partners

Sponsors and Partners, who are making this Possible.

           

Venue Sponsors



Tech Stack Partners



  • Registrations Open. Participant Check-in

    Welcome to Vikatan Hackathon. Please bring a valid ID Proof along with you, in the name in which you registered for the event. Copy of the invite in Electronic form, would suffice.
  • BootCamp

    What goes into the building of a prototype? How do you spot a problem, validate it and arrive at a solution for it (the idea)? The bootcamp helps define, what the participants should keep in mind when building a Prototype especially for people-oriented situations.
  • Participant Intro & Networking

    Your peers are your greatest ally to bounce off ideas and get feedback on what you are planning to build over the weekend.
  • Dinner & End of Day One

    That concludes the activities for day one, over dinner.
  • Check-in. Breakfast Served.

    Good Morning! Please make sure you are nice and early.
  • Team Introductions

    We are expecting close to 30 teams to participate in the event. During this time the Team leader will introduce the team members and mention the challenge that they are trying to solve. Make sure you meet teams working on similar challenges during tea time!
  • Prototype Building, starts.

    Work starts. Mentors at the event will be dropping in periodically, and spending time with teams. Have a visibile white board / progress chart near you, so that if you do not need help and are progressing well, you can just point to that and explain quickly. Unless and otherwise absolutely stuck, the mentors won't deeply engage, beyond giving general feedback on shaping the idea and the market positioning. Some tech mentors can help you pick tools and frameworks to make your job easier, rather than building everything from scratch.
  • Lunch.

    It can be rather tempting to ignore food and keep at building the prototype, but fuel up before you continue. Use the opportunity to get your team to talk about what they are passionate and good at, and allot tasks to them that leverages that. Make sure everyone gets to enjoy the work they do - rather than slaving to build out a prototype for YOU. Use the lunch to build rapport.
  • Prototype Building, Continues.

    Work Continues. Mentors at the event will be dropping in periodically, and spending time with teams. Have a visibile white board / progress chart near you, so that if you do not need help and are progressing well, you can just point to that and explain quickly. Unless and otherwise absolutely stuck, the mentors won't deeply engage, beyond giving general feedback on shaping the idea and the market positioning. Some tech mentors can help you pick tools and frameworks to make your job easier, rather than building everything from scratch.
  • Dinner.

    Dinner, is served.
  • End of Day Two

    Day two, usually is a rather tense day. But by now you'd have all your team in place and know exactly where this is heading. However before you part ways, make sure everyone exchanges contact info - so that you can co-ordinate to be on time, and start work the next day.
  • Check-in. Breakfast Served.

    It's a sunday, We know, but do come in early. Just, this weekend!
  • Team Updates. Continue Building.

    A quick shoutout by the teams to see if they are on track and if their team members are all back and getting started.
  • Lunch Break

    We might invite a few mentors and entrepreneurs to talk to you all during this time. Most of them are entrepreneurs who have been exactly where the participants are, not too long ago. Experience, counts for a lot.
  • End of Prototype building. Prepare for Demo.

    By now, the prototype should be looking like whats its meant to - with all the Ps and Qs checked. Practice the pitch and the demo - even Steve Jobs did. Don't try to wing it.
  • Demo Starts

    A select jury presides over this bit, and so do a few participants who have come to witness and show support for the teams. Each team gets 3 minutes to demo the product and seven minutes of Q&A time with the Jury, and audience. The jury doesn't judge, but provides feedback on the prototype built, and what to keep in mind moving forward.
  • End of Vikatan Hackathon. Winners Announced

    You come in as strangers and strangely leave as friends. The top three teams are picked and prizes are awarded.

Schedule

The event is spread over a weekend, approximately 50 hours - starting from Friday evening and ends on Sunday evening.

The agenda is simple. Selected teams are given the space and the resources over a weekend to build solutions for the challenges that we have identified. The top three teams to build elegant solutions are declared winners.

Venue Details and Participation:

  • Date: September 23th, 6:00pm - Sept 25th, 9:00pm
  • Venue : Thoughtworks, Ascendas, Taramani, Chennai
  • Participation Fee : Invited on Selection. Free
  • Prizes : Rs 75K for 1st Team. Rs. 50K for 2nd Team. Rs. 25K for 3rd Team*
    Prize Money subject to appropriate tax deductions as per tax norms.

Timelines

  • Currently: Open for Expression to Participate
  • August 5th : Acceptance of Solutions for Challenges
  • September 5th : Deadline for Solutions
  • September 15th : All selected teams are notified
  • September 23-25th : Vikatan Hackathon

சவால்கள்

நீங்கள் தனிநபராகவோ, அணியாகவோ கீழே கொடுக்கப்பட்டுள்ள சவால்களில் ஏதேனும் ஒன்றுக்கான தீர்வின் முன்மாதிரியை (Prototype) வடிவமைக்க வேண்டும்.


  • #1: கல்வி
    இங்கு கல்வி என நாம் சொல்வது ஒருவரின் அறிவை வளர்த்துக்கொள்வதற்கான கற்றலைத்தான். குழந்தைகளிடம் கற்றுக்கொள்வதற்கான தேடலை எப்படி விதைப்பது? கற்றலில் ஆர்வத்தையும், கிரியேட்டிவிட்டியையும் எப்படி மேம்படுத்துவது? விர்ச்சுவல் ரியாலிட்டியையும், ஆக்மென்ட்டட் ரியாலிட்டியையும் பயன்படுத்தி கற்றலை ஜாலியாக ஆக்குவது எப்படி? சுய உதவி குழுக்களின் திறனை அதிகரிப்பது எப்படி? பொருள் உற்பத்தியாளர்களுக்கும், விவசாயிகளுக்கு, உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவியும், பயிற்சியும் கொடுக்கக் கூடிய வழிகள் என்னென்ன?

  • #2: விவசாயம்
    நம் பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானியங்களைத் தவிர வேறு உதவிகள் கிடைப்பதில்லை. Business to Business மற்றும் Direct to Consumer முறையில் விவசாயிகள் தங்களுடைய தயாரிப்புகளை சந்தைப் படுத்த உதவுவது எப்படி? நுகர்வோரையும், நகரவாசிகளையும் வேளாண்மையில் ஈடுபடுத்தக்கூடிய வழிகள் என்ன? உதவி, ஆலோசனைகளுக்கு ஒவ்வொரு விவசாயியையும் இணைக்க முடியுமா? நில ஆவணங்கள், மண் , நிலத்தடி நீர், சந்தை நிலை ஆகிய தகவல்களை பயிர் சாகுபடி முறைகளில் ஆலோசனை தருவதற்கு  இன்னும் திறம்பட பயன்படுத்துவது எப்படி?

  • #3: சுற்றுச்சூழல்
    மறுசுழற்சி, வீட்டு உரம், அப்சைக்ளிங் ஆகியவற்றில்  நம் விரயங்களை எப்படிக் கட்டுப்படுத்துவது? சுய உணர்வு கொண்ட சமூகமாக மாற்றுவதற்கு இது போன்ற வேலைகளை எளிமையாக்கினால் பலர் இணைவார்கள். எப்படி சாத்தியமாக்குவது? நம்முடைய கார்பன் ஃபுட்ப்ரின்ட்டை குறைப்பது எப்படி? வங்கி ஸ்டேட்மென்ட்டில் இருந்து பாடப்புத்தகங்கள் வரை, இதழ்களில் இருந்து செய்தித்தாள்கள் வரை பேப்பரின் பயன்பாட்டைக் குறைக்க என்ன வழி?

  • #4: திறனளித்தல் & வேலைவாய்ப்புத் திறன்
    நகரங்களிலும், கிராமங்களிலும் இன்றும் பெண்கள் ஆண்களுக்கு சமமான அங்கீகாரத்தைப் பெற சிரமப்படுகிறார்கள். பெண்கள் தங்கள் வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளைப் பார்க்க எப்படித் திறனளிப்பது? வீட்டு வேலை செய்யும் பெண்களை ஒருங்கிணைப்பது எப்படி? மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை உயர்த்த அவர்களுக்கு என்ன மாதிரியான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் உருவாக்கிக் கொடுக்கலாம்?

  • #5: பொது வாழ்க்கை & சமூகம்
    தொழில்நுட்பங்களின் சக்தியை மேம்படுத்துவதன் மூலம் மக்களை இணைப்பது எப்படி? பெண்களுக்கு இரவு நேரத்திலும், முதியவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் அவசர காலத்திலும் உதவக்கூடிய அமைப்புகளை எப்படி உருவாக்கலாம்? பேரழிவுக்காலங்களில் உடனடியாக, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஒன்று சேரக்கூடிய தொழில்நுட்பங்களை எப்படி உருவாக்குவது? பாசிட்டிவ்வான மாற்றத்துக்காக பலமான தொழில்நுட்பத்துடனும், நிபுணத்துவத்துடனும் நாம் சமூகமாக அணி திரளலாமா?

  • #6: சிறப்பு அனுமதி
    தனிநபராகவோ அல்லது உங்களைச் சுற்றியோ நீங்கள் பார்த்த ஒரு சிக்கலுக்கு,  உங்களிடம் சரியான தீர்வு இருந்தால் இந்த வைல்டு கார்டு என்ட்ரியில் பதிவு செய்யலாம். ஆனால், சமூகம், தகவல், இணைப்பு ஆகிய மூன்றுக்கும் கீழ் வந்து, மேலே சொன்ன ஐந்து தலைப்புகளுக்குக் கீழ் வராவிட்டால் மட்டுமே பதிய வேண்டும்.

Participate!

Are you interested in Participating in the Upcoming Vikatan Hackathon?

எங்களைப் பற்றி

1926-ம் ஆண்டு துவங்கப்பட்ட ஆனந்த விகடன் இதழுக்கு மிகப் பெரிய பாரம்பர்யம் உண்டு. 

ஆனந்த விகடன் இதழை வளர்த்தெடுத்த பெருமை அமரர் எஸ்.எஸ். வாசன் அவர்களையேச் சேரும்.  எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், விளம்பர முகவர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர்... என பன்முகத் திறமை படைத்தவர் எஸ்.எஸ்.வாசன். 1947-ம் ஆண்டு வெளிவந்த 'சந்திரலேகா' திரைப்படம் அவரின் பெருமையை பறைச்சாற்றும். இந்தி, பெங்காலி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் இத்திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தியாவில் மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் வெளியிடப்பட்டு அவருக்கு பெருமைச் சேர்த்தது. 

தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் மிகவும் சாதாரண குடும்பத்தில் டி.எஸ்.சீனிவாசனாக பிறந்த எஸ்.எஸ்.வாசன், சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். இருப்பினும், எதிர்காலம் பற்றிய கனவுகளுக்கும் கனவுகளை நனவாக்கத் தேவையான துணிச்சலுக்கும் அவரிடம் எப்போதும் பஞ்சம் இருந்தது இல்லை. சொந்த ஊரில் இருந்து சைக்கிளிலேயே சென்னை வந்த அவர், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் இருந்த மூர் மார்கெட்டைப் பார்த்து வியந்தார். அங்கே விற்பனை செய்யப்படும் புத்தகங்களைப் பார்த்த அவர், புத்தகங்களின் காதலனாகவே மாறினார். அந்த காதல்தான், பிறகு ஊரும் உலகும் அறிந்த சரித்திரமாக விஸ்வரூபமெடுத்தது.

90-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆனந்த விகடன் இன்று இதழ்கள், புத்தகங்கள், தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், இணையதளங்கள் என்று பல திசைகளிலும் கிளைகளை விரித்து மாபெரும் விருட்சமாக வளர்ந்து கம்பீரமாக நிற்கிறது. 

ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து வெளிவருபவை 12 இதழ்கள்தான் என்றாலும், மொத்தப் பிரதிகளின் கணக்கில் சொன்னால், ஆண்டுக்கு 6 கோடி பிரதிகள் விற்பனையாகின்றன. இதிலிருந்தே விகடனின் முழு வீச்சைப் புரிந்துகொள்ள முடியும். அதேபோல, விகடன் பிரசுரம் வாயிலாக வெளியான 800 புத்தகங்கள் ஆண்டுக்கு சுமார் பத்து லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன. தொலைக்காட்சி நேரத்தின் 'பிரைம் டைம்'ஐ தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சி செய்வதும் விகடன் குழுமம்தான். இணையதளம், சமூக வலைதளம், ஸ்மார்ட்போன்... என்று சகலவிதமான டிஜிட்டல் மீடியத்திலும் விகடன் குழுமம் ஆழமாக வேர் பதித்து மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்ற ஊடகக் குழுமமாக விளங்குகிறது.